திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Friday, July 8, 2011

உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.

வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.

ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.

...யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.

Monday, July 4, 2011

வஸீலா ஒரு விளக்கம்


மனிதன் செய்யும் நல்லமல் இம்மையில் பயன் தருமா? – வஸீலா ஒரு விளக்கம் (1)

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி
அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.

அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.
இந்நிலையில் அமல்கள், இபாதத்கள் புரிபவனுக்கு மறுமையில் மகத்தான கூலி கள் வழங்கப்பட்டு சுவனமும் பரிசாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகிலேயே அந்த இபாதத்திற்கான நற்பலன்களும் காட்டப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
“விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனிடத்திலே “வஸீலா” தேடுங்கள். அவனது பாதையிலே போர் புரியுங்கள். வெற்றியடைவீர்கள். (அல்குர் ஆன் 5:35)
இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து முக்கியமான மூன்று கட்டளைகள் சொல்லப்படுகின்றன.
1. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழ வேண்டும்.
2. அல்லாஹ்விடத்தில் வஸீலா தேட வேண்டும்.
3. அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வேண்டும்.

தக்வா என்றால் என்ன? அதனை எப்படி செயலாற்ற வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் பாதையில் எப்படி ஜிஹாத் (போர்) புரிய வேண்டும் என்பதும் நன்கு தெரியும். ஆனால், அல்லாஹ்விடத்தில் எப்படி வஸீலா தேடுவது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.
“வஸீலா” என்ற இந்த வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் சொல்லும்போது, “அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெறுதல்” என்பதாகக் கூறுகிறார்கள். அபூ கதாதா (ரஹ்) அவர்கள் கூறும்போது “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அவனுக்கு உவப்பான முறையில் நடந்து, அவனது நெருக்கத்தைப் பெறுதல்” என்று கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தைப் பெறுவதற்கு எந்த நற்காரியம் உதவி புரியுமோ அதுவே வஸீலா
எனப்படும்.