திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Tuesday, August 30, 2011

நோன்பு பெருநாள் தொழுகை

நோன்பு பெருநாள் தொழுகை (30/08/2011)

Friday, August 19, 2011

லைலத்துல் கத்ரின் சிறப்பு


புனித மிக்க ரமளான் மாதத்தில் இரவுத் தொழுகையை தொழுதால் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கியதை அறிவோம். ரமளான் மாதத்தில் ஒருநாள் இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது என்றும் அல்லாஹ் அருள்மறையாம் குர்ஆனில் சிலாகித்துக் கூறுகிறான். 
1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)க் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். 
2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? 
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். 
4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். 
5. சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1,2,3,4,5)  
இந்த இரவில் தான் இறைவனின் அருள்மறையாம் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ளது என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான்.  'நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கியருளினோம்';. (44:3) 
கண்ணியமுள்ள ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் வர்ணிக்கிறான். இம்மகிமைமிக்க இரவில் தொழுவது பற்றி பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கினார்கள். 
(1) 'யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ 
ஆயிரம் மாதங்களைவிட சிறந்த நாளாக லைலத்துல் கத்ர் திகழ்கிறது. அதில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மற்றும் வானவர்களும் வருகை தருவார்கள் என்று குர்ஆன் பறைசாற்றுகிறது. 
இப்புனித நாளின் இரவில் நின்று தொழுதால் தொழுதவரின் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஆசைப்படுவான் என்பதில் ஐயமில்லை, அது எந்த நாள் என்பதில் தான் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் அது இருபத்தி ஏழு என்று முடிவு செய்து இதுதான் லைலத்துல் கத்ர் என்று தத்துவார்த்தம் பேசி மற்ற நாட்களில் ஈடுபடாத அளவு அந்நாளில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கடைவீதிகளில் அலங்கார பொருட்களை வாங்குவதில் முயற்சிப்பார்கள். 
ஆனால் நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு நாளையும் குறிப்பிட்டு கூறவில்லை. லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமானால்  ரமளானின் கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்கள். 
(2) அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம்;. அப்போது நபி(ஸல்) அவர்கள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 
''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் 
மேலும் லைலத்துல் கத்ரை கடைசி ஏழு நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள். 
(3) நபித்தோழர்களில் சிலருக்கு (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது நபி(ஸல) அவர்கள் ''உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் ஒத்து இருப்பதாக காண்கிறேன். ஆகவே அதை தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதை தேடட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம் 
பெருமானார்(ஸல்) அவர்கள் கடைசி பத்து நாட்கள் அல்லது கடைசி ஏழு நாட்கள் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளதை காண்கிறோம். அதே போல் கடைசிப்பத்தின் சில நாட்களை சுட்டிக்காட்டி இந்நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளார்கள். 
(4) ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள். லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 

Thursday, August 18, 2011

லைலத்துல் கத்ர்

'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)
என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் அறிவோம்.
'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.

அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)

'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்' (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)

மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)

மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்.
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Friday, August 5, 2011

எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!


எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!printEmail
வாசகர் பகுதி வாசகர் மடல்
புதன், 03 ஆகஸ்டு 2011 11:00
அன்புச் சகோதர சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்.

எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.

சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லைஎன்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.

இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவருடைய தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்போது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து-மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம்.

அதுபோலத்தான் அன்றும் நடந்தது.