இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான
துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று
நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும்
பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். நூல்:முஸ்லிம்(2151)
இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள்
மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும்
ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
“நபி (ஸல்)
அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின்
துணைவியார்களில் சிலர் கூறினார்கள்”
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்:
அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
எனவே நாமும் நம் குடும்பத்தினரையும் ஆர்வமூட்டி
இந்த நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து அன்பையும் பாவ மன்னிப்பையும் பெறுவோமாக.
