Monday, October 14, 2013
Sunday, June 2, 2013
கிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்
அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
அழகு.............இளமை...... கிரீன் டீ................
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்
•ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
•உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
•உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
•ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
•இதய நோய் வராமல் தடுக்கிறது.
•ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
•உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
•புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
•புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
•எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
•பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
•வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
•ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
•சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
•பருக்கள் வராமல் தடுக்கிறது.
•நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
•மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
•உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Source:Daily Thanthi (Sunday Magazine 20/11/2011)
பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.

Labels:
மற்றவை
Saturday, April 27, 2013
கணிதமேதை அல் குவாரிஸ்மி பற்றிய தகவல்கள் !!!(AL KHWARIZMI )
கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.
12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்றக் அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில் நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன் காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறை வழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இந்தியர்களிடமிருந்து கணித என்களை கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 – 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்
நன்றி: இன்று ஒரு தகவல்

இரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன?
இரத்த சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன? அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது. – வீடியோ
Posted on April 27, 2013 by vidhai2virutcham
விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப் பவர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்க ளுக்குப் பிறகே அது செயலிழக்கிற து. இந்நிலையில்தான் ரத்தத்தை சுத்தி கரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலி ஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிட த்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளி யே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட் டினின், தேவையற்ற அமிலங்கள், அதிகப்படியான நீர் பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரிக்காவிட்டால் அதிகப்படியான நீரால் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளும், ரத்தஅழுத்தம் கூடும். கால் வீக்கம் ஏற்படும். ஒரு சில நாட்களில் உயிரிழப்பும் ஏற்படும். எனவே ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிஸிஸ் அல்லது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்கு, மாற்று உறுப்பு கிடைப்பது அரிதான நிலை யில் டயாலிஸி ஸ் கைகொடுக்கி றது.
அப்படி செய்யப்படும் ரத்த சுத்திகரிப்பு அதாவது டயாலிஸிஸ் செய்வதில் எத்தனை வகைகள் உள்ளன என்றும் அவைகள் எப்படி செயல்படுத்தப்படுகின் றன என்பதை அற்புதமாக வீடியோவில் பதி வேற்றியுள்ளனர். நீங்களும் கண்டு பயன்பெற அந்த வகையான வீடியோ வை விதை2விருட்சம் இணையம் இங்கே பகிர்ந்துள்ளது.

Sunday, April 21, 2013
ஆன்லைனில் அரசாங்க சேவை
நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)
Links to extract EC in English - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
Links to extract EC in Tamil - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
Links to extract Registered Documents -
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/english/smar.asp
Links to CHECK Registered Chit Companies - http://www.tnreginet.net/english/schit.asp
Links to CHECK Registered Society - http://www.tnreginet.net/english/society.asp
Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp
Thanks :
சுபா ஆனந்தி —

Subscribe to:
Posts (Atom)