திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Saturday, April 27, 2013

இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன‍?

இரத்த‍ சுத்திகரிப்பு (டயாலிஸிஸ்) என்றால் என்ன‍? அது எவ்வாறு செயல்படுத்த‍ப்படுகிறது. – வீடியோ
Posted on April 27, 2013 by vidhai2virutcham
விபத்து, புற்றுநோயால் இறப்போரைவிட சிறுநீரக பாதிப்பால் இறப் ப‍வர்கள் மிகமிக அதிகம். சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு பல கட்டங்க ளுக்குப் பிறகே அது செயலிழக்கிற து. இந்நிலையில்தான் ரத்தத்தை சுத்தி கரிக்கும் சிறுநீரகங்களின் பணியை (டயாலிஸிஸ்) இயந்திரங்கள் செய்கின்றன. இச்சிகிச்சை தேவைப் படுவோர் வாரத்திற்கு 3 முறையோ, 2 முறையோ சிகிச்சை பெற வேண்டும். ஒரு முறை டயாலி ஸிஸ் செய்ய 4 மணி நேரம் தேவை. ஒரு நிமிட த்திற்கு 250 மி.லி., முதல் 300 மி.லி., ரத்தம் உடலில் இருந்து வெளி யே வந்து சுத்திகரிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட் டினின், தேவையற்ற அமிலங்கள், அதிகப்படியான நீர் பிரிக்கப்படுகின்றன. இவற்றை பிரிக்காவிட்டால் அதிகப்படியான நீரால் நுரையீரலில் நீர்கோர்த்துக் கொள்ளும், ரத்தஅழுத்தம் கூடும். கால் வீக்கம் ஏற்படும். ஒரு சில நாட்களில் உயிரிழப்பும் ஏற்படும். எனவே ரத்தத்தை சுத்திகரிக்க டயாலிஸிஸ் அல்லது சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சையே தீர்வு. சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்கு, மாற்று உறுப்பு கிடைப்பது அரிதான நிலை யில் டயாலிஸி ஸ் கைகொடுக்கி றது.

அப்படி செய்ய‍ப்படும் ரத்த சுத்திகரிப்பு அதாவது டயாலிஸிஸ் செய்வதில் எத்தனை வகைகள் உள்ள‍ன என்றும் அவைகள் எப்ப‍டி செயல்படுத்த‍ப்படுகின் றன என்பதை அற்புதமாக வீடியோவில் பதி வேற்றியுள்ள‍னர். நீங்களும் கண்டு பயன்பெற‌ அந்த வகையான வீடியோ வை விதை2விருட்சம் இணையம் இங்கே பகிர்ந்துள்ள‍து.

Sunday, April 21, 2013

ஆன்லைனில் அரசாங்க சேவை

நல்ல செய்தி, பொதுவாகவே ஈஸீ(EC - Encumbrance Certificate) எனப்படும் என்கும்பரன்ஸ் சர்டிஃபிக்கட் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆஃபிஸுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம். இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?

ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு. இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர்,கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி ஆலுவுலகங்களூக்கு இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.

அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்க்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.

அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது

உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப்பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும் (2012 வரை அப்டேட் செய்யபட்டது)

Links to extract EC in English - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0

Links to extract EC in Tamil - http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1

Links to extract Registered Documents -
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp

Links to extract Marriage Certificate
http://www.tnreginet.net/english/smar.asp

Links to CHECK Registered Chit Companies - http://www.tnreginet.net/english/schit.asp

Links to CHECK Registered Society - http://www.tnreginet.net/english/society.asp


Links to CHECK the Land Value Guideline (updated till 2012)
http://www.tnreginet.net/Guidelinevalue2012/gvaluemainpage2011.asp



Thanks :
சுபா ஆனந்தி —

Friday, April 19, 2013

சவுதி அரேபியா அல்கோபர் தாவா நிலையத்தின் சார்பாக நடத்தப்படும் நிகழ்சிகள் நேரலையில்:
சவூதி நேரம் 8:30 முதல் 10:00 மணி வரை எல்லா வியாழக்கிழமைகளில் நடை பெறுகிறது, மற்றும் நடத்தப்படும் குரான் வகுப்புகளையும் இங்கே உள்ள வீடியோவில் காணலாம்

Sunday, October 30, 2011

அரஃபா நோன்பு


 இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நம‌க்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.

அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.      நூல்:முஸ்லிம்(2151)

இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும் ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்”
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.

எனவே நாமும் நம் குடும்பத்தினரையும் ஆர்வமூட்டி இந்த நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து அன்பையும் பாவ மன்னிப்பையும் பெறுவோமாக.

Friday, October 21, 2011

பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்


  VP Name:  Thiruppalaikkudi      Votes Polled:  3529      Valid Votes:  3374      Invalid Votes:  155
Sl.NoNameFather/Husband NameParty NameVotes SecuredStatus
1காமிலா பானு.முமுகம்மது இக்பால்1064Elected
2காளிதேவி.செசெந்தில்குமார்94Deposit Lost
3கோவிந்தம்மாள்.ராராமகிருஷ்ணன்528Deposit Lost
4செல்வமணி.சசதாசிவம்162Deposit Lost
5செல்வி.ரரவிசந்திரன்541Deposit Lost
6நவாசிய பேகம்.சுசுபிர்தீன்613NotElected
7பாய்ஷா பானு.முமுகம்மது காசிம்31Deposit Lost
8ரேணுகாதேவி.அஅாிதாஸ்313Deposit Lost
9லிங்கமுத்து.செசெல்லம்28Deposit Lost

நன்றி: Tamil Nadu State Election Commission.