Tuesday, June 12, 2018
Saturday, June 9, 2018
Tuesday, June 5, 2018
Tuesday, May 29, 2018
Monday, October 14, 2013
Sunday, June 2, 2013
கிரீன் டீ என்னும் கற்பக விருட்சகம்
அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்’ கிரீன் டீயிலிருந்து மிக அதிக அளவில் கிடைக்கிறது. வைட்டமின் ‘சி’ யிலிருந்து கிடைக்ககூடிய ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவை விட 100 மடங்கும் வைட்டமின் ‘ஈ’ யிலிருந்து கிடைப்பதைவிட 25 மடங்கும் அதிகம் கிரீன் டீ யில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக பறிக்கப்பட்ட தேயிலை உடனடியாக உலர்த்தபடாவிட்டால் வாடி வதங்கி ஆக்ஸிஜனேற்றம் அடந்து அதில் உள்ள குளோரோபில் எனப்படும் பச்சையங்கள் சிதைவுற்று ‘டானின்’ வெளிவருகிறது. இதுவே டீயின் துவர்ப்பு மற்றும் கசப்புத் தன்மைக்கு காரணமாகிறது.இது ஒருவகையான நொதித்தல் வினை போன்றதாகும்.
கிரீன் டீ தயாரிப்பில் இவ்வாறு நொதிக்க விடாமல் இளங்குருத்து தேயிலைகள் உலர வைக்கும் முன்பாக மிதமாக சூடாக்கப்படுவதால் அதில் உள்ள நொதிகளின் வினை மந்தமாக்கப் பட்டு கசப்பு சுவை தரக்கூடிய ‘பாலிபீனால்கள்’ சிதையாமல் பாதுகாக்கப் படுகிறது.
அழகு.............இளமை...... கிரீன் டீ................
கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.
சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.
எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிரீன் டீயின் நன்மைகள்
•ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
•உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
•உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
•ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
•இதய நோய் வராமல் தடுக்கிறது.
•ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
•உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
•புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
•புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.
•எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
•பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.
•வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.
•ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
•சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.
•பருக்கள் வராமல் தடுக்கிறது.
•நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.
•மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.
•உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.
Source:Daily Thanthi (Sunday Magazine 20/11/2011)
பயன்படுத்தும் முறை:
கூடுமானவரை பால் சேர்க்காமலே இது உட்கொள்ளப்படுகிறது. வரக்காபி [டீ]என்பதுபோல இது 'பிளெய்ன் டீ' யாக பால் இல்லாமல் எடுத்துக் கொள்ளப்படுவதே சிறப்பு.
இது 'டிப் டீ' எனப்படும் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும்.
மற்ற டீ போல நேரிடையாக கொதிக்க வைக்கத் தேவையில்லை. அப்படிச் செய்யும்போது கசப்புத் தன்மை அதிகரிக்கிறது.
80-85 டிகிரி வெப்பநிலைக்கு கொதிக்க வைக்கப்பட்ட நீரில் டீ பையை சுமார் 1-3 நிமிடம் மூழ்க வைத்தாலே போதும்.இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ அருந்தலாம்.
சுவைக்குத் தேவையானால் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்.
விருப்பமானவர்கள் வாசனைக்கு புதினா இலைகள்,எலுமிச்சை அல்லது இஞ்சி சேர்த்தும் பருகலாம்.
ஒருமுறை சாறு இறக்கிய பிறகு வேண்டுமானால் மீண்டும் கொதிநீர் சேர்த்து இரண்டாவது முறையும் வடிக்கட்டி குடிக்கலாம்.
Labels:
மற்றவை
Saturday, April 27, 2013
கணிதமேதை அல் குவாரிஸ்மி பற்றிய தகவல்கள் !!!(AL KHWARIZMI )
கணிதத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய சாதனைகள் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இன்றைய நவீன கணினிக்கு அவை தான் அடிப்படையாகும்.
எட்டாம் நூற்றாண்டில் இரண்டாம் பகுதியில் ஆட்சிப் புரிந்த அப்பாசியக் கலிபா அல்-மாமுனூடைய காலத்தில் தான் முறையான கணித விஞ்ஞான ஆய்வு தொடங்கிற்று. இந்தக் காலக்கட்டத்தில் கணித துறை ஆக்கங்கள் அனைத்தும் முஸ்லிம்களால் மட்டுமே இயற்றப்பட்டன. 11 ஆம் நூற்றாண்டு வரை கணிதத்துறையில் முஸ்லிம்களின் அடிப்படையான ஆக்கங்களே காணப்பட்டன.
12 ஆம் நூற்றாண்டில் இவர்களுடைய கணிதவியல் ஆக்கங்களை யூதர்களும்,கிறித்தவர்களும் அரபி மொழியிலிருந்து லத்தின் மற்றும் ஹீப்ரு மொழிகளில் மொழிபெயர்த்தனர். 13 ஆம் நூற்றாண்டு வரை யூத கிறித்துவர்களால் கூட இவர்களுடைய ஆக்கங்களுக்கு நிகரானவற்றை இயற்ற முடியவில்லை.
நாம் இன்று எழுதக்கூடிய 1,2,3 என்ற எங்கள் ஆங்கில எண்கள் என்றே பலர் தவறாக எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் அவை அரபி எண்கள் என்று தான் அழைக்கபடுகின்றன. இந்த எண்கள் முறை இந்தியாவிலிருந்து அரபுலகதிற்கு வந்தது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் முஸ்லிம்கள் தாம் பிறரிடமிருந்து பெற்றக் அறிவுக் கலைக்கு என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக, அறிவு துறையில் நேர்மையுடையவர்களாக (Intellectual Honesty ) விளங்கியுள்ளனர். அதன் காரணமாக வலப்புறத் திலிருந்து இடப்புறமாக எழுதப்படும் அரபி எழுத்து முறை வழக்கத்திற்கு மாறாக இந்த எண்கள் மட்டும் இடப்புறத்திலிருந்து வலபுறமாகத்தான் இன்றும் எழுதப்படுகின்றன. இன்றும் அரபுலகில் இந்த எண்கள் இந்திய எண்கள் என்றே அழைக்கப்படுகின்றன.
இந்தியர்களிடமிருந்து கணித என்களை கற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக இவ்வாறுதான் மேற்குலகத்திற்கு அதனை அறிமுகம் செய்து வைத்துள்ளனர்.இன்னும் பூஜ்யம் அல்லது ஸைபர் என்ற எண் வடிவத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் எண் முறை கணிதத்தை (Arithmetic) முஸ்லிம்கள் மிகவும் எளிமைப் படுத்திவிட்டனர். Zero என்ற ஆங்கில சொல்லுக்கு பிரெஞ்சு மொழியில் Ciphra எனப்படும். இது Sifr என்ற அரபி சொல்லிலிருந்து தோன்றியதாகும். என்றால் பூஜ்யம் என்று பொருள்படும்.
ஒன்பதாம் நூற்றாண்டில் கலிபா அல் மாமூனுடைய காலத்தில் வாழ்ந்த மிகப் பெரும் கணித மேதை அபு அப்துல்லா முஹம்மது இப்னு மூசா அல்குவாரிஸ்மி என்பவராவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி ஆகும். 1,2,3 என்ற எண்முறை கணிதம் இவரது பெயராலேயே ஐரோப்பாவிலிருந்து அறிமுகமானது. அதனை ஆங்கிலத்தில் Algorithm என அழைப்பர். அல்குவாரிஸ்மி என்ற பெயரே Algorithm என மருவி வந்துள்ளது Algebra என்ற குரிக்கணிதவியலின் தந்தையும் இவர்தான். இவர் கிதாபுல் ஜபர் வல் முகாபலா என்ற நூலினை எழுதியுள்ளார். அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் Algebra என்ற சொல் பிறந்தது.வடிவக்கணிதம் (Geometry ), முக்கோணக்கணிதம் (Trigonometry ) என்ற கணித முறைகள் ஏற்படுத்தியவர்களும் முஸ்லிம்களே.
அரபியர்களின் நடமாடும் கலைக்களஞ்சியம் என அழைக்கப்படும் அல்-கிந்தி என்பவர் 270 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில கணித நூல்களும் அடங்கும். இவரது முழுப்பெயர் அபுயூசுப் யாகூப் இப்னு இசாக். இவர் வாழ்ந்தக் காலம் கி.பி 801 – 873 ஆகும்.
அல் குவாரிஸ்மி மற்றும் அல் கிந்தினுடைய எழுத்துகளின் வழியாக தான் எண்முறை கணிதம் மேற்குலகிற்கு நன்கு அறிமுகமானது. இவர்களுக்கு பின் எண்ணற்ற பல முஸ்லிம் கணித மேதைகள் தோன்றி கணிதவியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு தொண்டாற்றியுள்ளனர்
நன்றி: இன்று ஒரு தகவல்
Subscribe to:
Posts (Atom)



