திருப்பாலைக்குடி இணைய தளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்

Saturday, March 30, 2019

சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள்

நம் அன்றாட தேவைக்காக பயன்படும்  சான்றிதழ் Online-ல் Apply செய்து பெறும் வழிமுறைகள் Video பதிவுகள் link கிழே....

 1. PAN Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: பான் கார்டு

2.Passport Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: பாஸ்போர்ட்

3. Passport Renewal செய்வது எப்படி?
link: பாஸ்போர்ட்

4.Driving Licence Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:ஓட்டுனர் உரிமம்

5.Smart  Ration Card Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: குடும்ப அட்டை

6.OBC Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:இசேவைகள்

7.Community certificate Online-ல் Apply செய்து பெறுவது  எப்படி?
Link:இ சேவைகள்

8.Income Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: இ சேவைகள்

9.Nativity Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link: இ சேவைகள்

10.First gradation Certificate Online-ல் Apply செய்து பெறும் வழிமுறை.
link:இ சேவைகள்

11.Aadhar Card Online-ல் Download செய்வது எப்படி?
link: ஆதார் அட்டை

12.Birth Certificate Online-ல் Apply செய்து பொறுவது எப்படி?
link: பிறப்பு சாண்றிதல்

13.court judgment order copy Online-ல் Apply செய்து பெறுவது எப்படி?
link: கோர்ட்

14.Death Certificate Online-ல் Download செய்வது எப்படி?
link: இறப்பு சாண்றிதல்

15.Voter ID Online-ல் Apply செய்து பெறுவது எப்படி?
link:வோட்டர் ஐடி

16.Voter ID Online-ல் Download செய்வது எப்படி?
link:வொட்டர் ஐடி

17. PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என செக் செய்வது எப்படி?
link: வைப்பு நிதி

18. IT Return File செய்வது எப்படி?
link: வருமான வரி

19.TDS pay செய்வது எப்படி?
link வருமான வரி

20.முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பணம் எவ்வளவு உள்ளது என check செய்வது எப்படி?
link: காப்பீடு

இது உங்களுக்கு மட்டும் அல்ல உங்கள் சொந்தங்களும் உங்கள் நண்பர்களுக்கும் உதவும் Share செய்யவும்.

தொழக்கூடாத பத்து இடங்கள்

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம்

அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்)

2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்”. அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: “அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்”. என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

3. ஒட்டகம் கட்டும் இடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!” (அஹ்மத்)

4. மலசலகூடங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர”. (இப்னு ஹிப்பான்)

5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்

மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நாங்கள் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: ‘ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் – கால்நடை – தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்’ என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்”. (முஸ்லிம்)

6. அபகரிக்கப்பட்ட பூமி

அபகரிக்கப்பட்ட பூமியில் தொழக்கூடாது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்
[7/31, 10:44 PM] Salman Tntj I Cad: பதை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

7. குபா பள்ளிவாசலுக்கு அருகில் காணப்பட்டு வந்த “ளிரார்” என்ற பள்ளிவாசல் மற்றும், (இப்பள்ளிவாசலைப் போன்று) தீங்கு விளைவிக்கும் நோக்கிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கிலும் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களோ அவர்கள் (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) ‘நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை’ என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சி கூறுகின்றான்”. (அத்தவ்பா: 107)

8. பூமி அதிர்வு போன்ற அல்லாஹ்வின் வேதனை இறங்கிய இடங்கள்

பொதுவாக இந்த இடங்களில் நுழைய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது: “அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்!” என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புஹாரி)

9. மஃமூம்களை விட உயரமாக ஓர் இடத்தில் இமாம் நின்று தொழுதல்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃமூம்கள் பின்னால் தாழ்வான இடத்தில் இருக்க, இமாம் உயரமான ஒன்றின் மீது நின்று தொழுவதைத் தடை செய்தார்கள். (தாரகுத்னி, ஹாகிம்)

10. தூண்களுக்கு மத்தியில் மஃமூம்கள் வரிசையாக நின்று தொழுதல்

அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் என்பவர் கூறுகிறார்: “நாம் ஒரு தலைவருக்குப் பின்னால் மஃமூம்களாகத் தொழுதோம். மனிதர்கள் எம்மை நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனவே, நாம் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு எம்மை விட்டும் பின்வாங்கி விட்டார். நாம் தொழுது முடித்தபோது அவர்கள்: ‘தூண்களுக்கு மத்தியில் தொழும் இச்செயலை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பயப்படக்கூடியவர்களாக இருந்தோம்’ என்று கூறினார்”. (நஸாஈ, திர்மிதி, அல்ஹாகிம், அஹ்மத்)

குழந்தைகளுக்கு கத்துக்கொடுங்க


ஒரு அருமையான பதிவு அனுப்புகிறேன் ஷேவ் பண்ணிவைச்சிகோங்க

குழந்தைகளுக்கு கத்துக்கொடுங்க

✍தெரிந்து கொள்வோம்:
சொர்க்கம் மற்றும் நரகம் பற்றி !

⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬⏬

1. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள சொர்க்கங்களின் பெயர்கள் யாவை?
சொர்க்கங்களின் பெயர்கள் :

1. தாருஸ் ஸலாம் - அமைதியான இல்லம் ( 10:25 )

2. தாருல் கரார் - நிலையான உலகம் ( 40:39 )

3. ஜன்னத்துல் ஹுல்த் - நிலையான சொர்க்கம் ( 25:15 )

4. ஜன்னத்துல் மாஃவா - சொர்க்கச்சோலைகள் ( 53:15,  32:19 )

5. ஜன்னத்துன் நயீம் - இன்பகரமான சொர்க்கம் ( 5:65,  56:12 )

6. ஜன்னத்து அத்ன் - நிலையான சொர்க்கம் ( 9;27, 19:61,  38:50 )

7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் - சொர்க்கத்துச் சோலைகள் ( 18:107,  23:11 )

சொர்க்க வாசல்களின் பெயர்கள் :

1. சலா ( ஸஹிஹீல் புகாரி # 1897

2. ஜிஹாத் ( ஸஹிஹீல் புகாரி # 1897

3. ஸதகா ( ஸஹிஹீல் புகாரி # 1897

4. ரய்யான் ( ஸஹிஹீல் புகாரி # 1897

5. ஹஜ்
6. கஸ்மன்
7. ஈமான்
8. திக்ரு

2. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள நரகங்களின் பெயர்கள் யாவை?

1. ஜஹன்னம் (52:13)
2. ளலா (70:15)
3. ஹுதமா (104:4,5 )
4. ஸகர் ( 54:48,  74:26, 27, 42)
5.ஜஹீம் ( 69:31)
6. ஹாவியா (101:9)

3. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள் யாவை?

1. கற்பூர பானம் (76;5)
2. இஞ்சி பானம் (76:17)
3. ஸல்ஸபீல் (76:18)

4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் யாவை?

1. ஸிந்துஸ் ( 18:31,  44:53,  76:21 )
2. இஸ்தப்ரக் ( 18:31,  44:53,  76:21 )

5. சொர்க்கவாசிகளுக்கு வழங்கப்படும் கன்னி (மனைவி) களின் பெயர் என்ன?

" ஹுருல்ஈன் "(கண்ணழகிகள்)
44:54,  56:22

6. சொர்க்கத்தில் வழங்கப்படும் ( போதையற்ற) முத்திரையிடப்பட்ட மதுவின் பெயர் என்ன?

" ரஹிகிம் மஹ்தூம் " ( 83:25 )

7. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே இருக்கும் அகலமான தடுப்புச்சுவரின்பெயர் என்னா?

" அல் அஃராப் "( 7:46 to 49 )

8. மனிதன் சோதனைக்குள்ளாக்கப் படாமல் எளிதாக சொர்க்கம் செல்லமுடியாது என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?
2:214

9. நல்லடியார்கள் தங்கும் சொர்க்கம் எங்கே உள்ளது?

" ஸித்ரதுல் முன்தஹா " என்ற இலந்தை மரத்தின் கீழ் உள்ளது (53:13,14,15 )

10. நரகவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் யாவை?

1. கொதிக்கும் : ( 6:70, 10:4, 37:67, 38:57)
2. சீழ் ( சலம்) ( 14:16,17, 38:57, 69:36, 78:25 )
3. ஸக்கூம் மரம் ( 37:62, 44:43 to 46, 56:52,53 )
4. முள்மரம் ( 88:6 )

11. நரகத்தில் இருக்கும் ஸக்கும் மரத்தின் பாளை எதனுடைய வடிவில் இருக்கும்?

ஷைத்தானின் தலைகளைப் போல் இருக்கும்!( 37:65 )

12. நகரவாசிகளை வானவர்கள் எதைக்கொண்டு அடிப்பார்கள்?

இரும்பு சம்மட்டியால் அடிப்பார்கள்! (22:21)

13. நரகவாசிகளின் ஆடைகள் யாவை?

1. நெருப்பினால் ஆன ஆடை ( 22:19)
2. நெருப்பினால் ஆன விரிப்பு ( 7:41)
3. நெருப்பினால் ஆன போர்வை ( 7:41)

14. நரகத்திற்கு எத்தனை
வாசல்கள் இருக்கும்?

7 வாசல்கள் இருக்கும் ( 15:44 )

15. நரகவாசிகளை வானவர்கள் எத்தனை முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள்?

70 முழம் உள்ள சங்கிலியால் கட்டுவார்கள் ( 69:32 )

16. சபிக்கப்பட்ட மரம் எது?

கள்ளி மரம் ( 17:60 )
ஸஹிஹீல் புகாரி : 4716

17. நரகத்தின் எரிபொருட்கள் யாவை?

1. மனிதர்களும், கற்களும் ( 2:24 )
2. மனிதர்களும்,  ஜின்களும் ( 22:98,  72:15 )

18. நரகத்தின் பொறுப்புதாரியான வானவரின் பெயர் என்ன ?

மாலிக் ( 43:77 )

19. பெருமையடிப்போர் நரகம் செல்வார்கள் என அல்லாஹ் எந்த வசனம் மூலம் எச்சரிக்கிறான்?

( 16:29,  39:72,  40:75,76 46:20 )

20. ஸகர் எனும் நரகத்திற்கு எத்தனை வானவர்கள் காவல் இருப்பார்கள்?

19 வானவர்கள் ( 74:30 )

21. நரகத்தை யாரைக்கொண்டு நிரப்புவதாக அல்லாஹ் கூறுகிறான்?

மனிதர்களைக் கொண்டும், ஜின்களைக்கொண்டும் ( 32:13 )

22. " ஜன்னத்துல் ஃபிர்தௌஸிற்கு " தகுதியானவர்களின் பண்புகள் யாவை?

1. உள்ளச்சத்துடன் தொழுவார்கள்
2. வீணானவற்றை புறக்கனிப்பார்கள்.
3. ஸகாத்தை முறைப்படி நிறைவேற்றுவார்கள்
4.தங்களது வெட்கஸ்தலங்களை பாதுகாப்பார்கள்
5. ஹலாலான தங்களது மனைவிகள், தனது அடிமைப்பெண் இவர்களிடம் மட்டுமே உறவு கொள்வார்கள்
6. அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் பேணுவார்கள்
7. தொழுகைகளை பேணித் தொழுவார்கர் ( 23:2 to 11 )

23. உங்கள் மனைவிகளுடன் சொர்க்கம் செல்லுங்கள் என்ற நற்செய்திக்கு உரியவர்கள் யார்?

குர்ஆன் வசனங்களை விசுவாசித்து அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்படிந்து நடப்பவர்கள்! ( 43:69, 70 )

24. ஸகர் என்ற நரகத்தின் தன்மை யாது?

தொழாதவன்,  ஏழைகளுக்கு உணவளிக்காதவன் இவர்களின் உடல்களில் பட்டு அவர்களின் உருவத்தை மாற்றிவிடும்! ( 74:26 to 29,  74:42 to 44 )

25. ஹாவியா என்ற நரகத்தின் தன்மை யாது?

கடுமையான சூடேற்றப்பட்ட நரக நெருப்பாகும் ( 101:9 to 11 )

26. " ஹுதமா " என்ற நரகத்தின் தன்மை யாது?

உடலில்பட்டவுடன் நேராகச்சென்று இதயத்தை தாக்கும்! ( 104.5.6.7)

👆இப்பதிவை தாங்கள் இருக்கும் மற்ற வாட்ஸ்அப் தளங்களுக்கும் அனுப்பி அவர்களும் அறிந்துக்கொள்ள உதவவும் இன்ஷாஅல்லாஹ்...

💐💐💐💐💐💐💐💐💐💐

எமது பெற்றோருக்கு எம்மால் செய்ய முடியுமான உயரிய துஆ!