Thursday, February 2, 2012
Sunday, October 30, 2011
அரஃபா நோன்பு
இஸ்லாமிய மாதங்களில் இறுதி மாதமான
துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று நோற்கும்படி நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஆர்வமூட்டியுள்ளார்கள்.
அபூ கதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், துல்ஹஜ் ஒன்பதாவது நாள் அன்று
நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும்
பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள். நூல்:முஸ்லிம்(2151)
இந்த அரஃபா நோன்பை, அவ்வருடம் யார் ஹஜ்ஜுக்கு செல்லாமல் இருக்கிறார்களோ அவர்கள்
மட்டும்தான் நோற்கவேண்டும். ஏனெனில் அரஃபா தினத்தன்று அரஃபாவில் ஒன்று கூடியிருக்கும்
ஹாஜிகள் நோன்பு நோற்பதற்கு நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள்.
“நபி (ஸல்)
அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின்
துணைவியார்களில் சிலர் கூறினார்கள்”
அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்:
அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
எனவே நாமும் நம் குடும்பத்தினரையும் ஆர்வமூட்டி
இந்த நோன்பை நோற்று அல்லாஹ்விடமிருந்து அன்பையும் பாவ மன்னிப்பையும் பெறுவோமாக.
Labels:
இஸ்லாம்
Friday, October 21, 2011
பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள்
VP Name: Thiruppalaikkudi Votes Polled: 3529 Valid Votes: 3374 Invalid Votes: 155
| |||||
|---|---|---|---|---|---|
| Sl.No | Name | Father/Husband Name | Party Name | Votes Secured | Status |
| 1 | காமிலா பானு.மு | முகம்மது இக்பால் | 1064 | Elected | |
| 2 | காளிதேவி.செ | செந்தில்குமார் | 94 | Deposit Lost | |
| 3 | கோவிந்தம்மாள்.ரா | ராமகிருஷ்ணன் | 528 | Deposit Lost | |
| 4 | செல்வமணி.ச | சதாசிவம் | 162 | Deposit Lost | |
| 5 | செல்வி.ர | ரவிசந்திரன் | 541 | Deposit Lost | |
| 6 | நவாசிய பேகம்.சு | சுபிர்தீன் | 613 | NotElected | |
| 7 | பாய்ஷா பானு.மு | முகம்மது காசிம் | 31 | Deposit Lost | |
| 8 | ரேணுகாதேவி.அ | அாிதாஸ் | 313 | Deposit Lost | |
| 9 | லிங்கமுத்து.செ | செல்லம் | 28 | Deposit Lost | |
நன்றி: Tamil Nadu State Election Commission.
Labels:
திருப்பாலைக்குடி
Saturday, September 10, 2011
ஷவ்வாலில் 6 நோன்பு
யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் 6 நோன்பு நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப்
போலாவார்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சா
(ரலி), நூல் : முஸ்லிம்
நாம் நோற்கும் ஒவ்வொரு நோன்புக்கும் 10 நன்மைகள் என்ற
அடிப்படையில் நமது ரமலானின் முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள்
என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய
ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு
முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய
முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்! நபி (ஸல்) அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டுமெனக்கூறினார்களே தவிர ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில் தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ, விட்டுவிட்டோ வைக்கலாம்.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த
ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக
இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி
முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக
இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று
பகர்கின்றன.
Labels:
இஸ்லாம்
Tuesday, August 30, 2011
Friday, August 19, 2011
லைலத்துல் கத்ரின் சிறப்பு
1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)க் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும்.
4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
5. சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1,2,3,4,5)
இந்த இரவில் தான் இறைவனின் அருள்மறையாம் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ளது என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். 'நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கியருளினோம்';. (44:3)
கண்ணியமுள்ள ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் வர்ணிக்கிறான். இம்மகிமைமிக்க இரவில் தொழுவது பற்றி பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கினார்கள்.
(1) 'யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
ஆயிரம் மாதங்களைவிட சிறந்த நாளாக லைலத்துல் கத்ர் திகழ்கிறது. அதில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மற்றும் வானவர்களும் வருகை தருவார்கள் என்று குர்ஆன் பறைசாற்றுகிறது.
இப்புனித நாளின் இரவில் நின்று தொழுதால் தொழுதவரின் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஆசைப்படுவான் என்பதில் ஐயமில்லை, அது எந்த நாள் என்பதில் தான் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் அது இருபத்தி ஏழு என்று முடிவு செய்து இதுதான் லைலத்துல் கத்ர் என்று தத்துவார்த்தம் பேசி மற்ற நாட்களில் ஈடுபடாத அளவு அந்நாளில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கடைவீதிகளில் அலங்கார பொருட்களை வாங்குவதில் முயற்சிப்பார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு நாளையும் குறிப்பிட்டு கூறவில்லை. லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமானால் ரமளானின் கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
(2) அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம்;. அப்போது நபி(ஸல்) அவர்கள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மேலும் லைலத்துல் கத்ரை கடைசி ஏழு நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.
(3) நபித்தோழர்களில் சிலருக்கு (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது நபி(ஸல) அவர்கள் ''உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் ஒத்து இருப்பதாக காண்கிறேன். ஆகவே அதை தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதை தேடட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பெருமானார்(ஸல்) அவர்கள் கடைசி பத்து நாட்கள் அல்லது கடைசி ஏழு நாட்கள் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளதை காண்கிறோம். அதே போல் கடைசிப்பத்தின் சில நாட்களை சுட்டிக்காட்டி இந்நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
(4) ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள். லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
Labels:
இஸ்லாம்
Thursday, August 18, 2011
லைலத்துல் கத்ர்
'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)
என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் அறிவோம்.
'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.
அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)
'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்' (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)
மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)
மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்.
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
Labels:
இஸ்லாம்
Subscribe to:
Posts (Atom)




