Tuesday, August 30, 2011
Friday, August 19, 2011
லைலத்துல் கத்ரின் சிறப்பு
1. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை)க் கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம்.
2. மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
3. கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும்.
4. அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும் தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர்.
5. சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97:1,2,3,4,5)
இந்த இரவில் தான் இறைவனின் அருள்மறையாம் மனிதகுலத்திற்கு வழிகாட்டியாம் திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டுள்ளது என்று வல்ல அல்லாஹ் கூறுகிறான். 'நிச்சயமாக நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கியருளினோம்';. (44:3)
கண்ணியமுள்ள ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் வர்ணிக்கிறான். இம்மகிமைமிக்க இரவில் தொழுவது பற்றி பெருமானார்(ஸல்) அவர்கள் நற்செய்தி வழங்கினார்கள்.
(1) 'யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்'. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், நஸயீ
ஆயிரம் மாதங்களைவிட சிறந்த நாளாக லைலத்துல் கத்ர் திகழ்கிறது. அதில் ஜிப்ரயீல்(அலை) அவர்கள் மற்றும் வானவர்களும் வருகை தருவார்கள் என்று குர்ஆன் பறைசாற்றுகிறது.
இப்புனித நாளின் இரவில் நின்று தொழுதால் தொழுதவரின் முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். முன்தைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஆசைப்படுவான் என்பதில் ஐயமில்லை, அது எந்த நாள் என்பதில் தான் கருத்துவேறுபாடு கொண்டுள்ளனர். சிலர் அது இருபத்தி ஏழு என்று முடிவு செய்து இதுதான் லைலத்துல் கத்ர் என்று தத்துவார்த்தம் பேசி மற்ற நாட்களில் ஈடுபடாத அளவு அந்நாளில் அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள். சிலர் கடைவீதிகளில் அலங்கார பொருட்களை வாங்குவதில் முயற்சிப்பார்கள்.
ஆனால் நபி(ஸல்) அவர்கள் எந்த ஒரு நாளையும் குறிப்பிட்டு கூறவில்லை. லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமானால் ரமளானின் கடைசி பத்து நாட்களில் தேடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
(2) அபூஸயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம்;. அப்போது நபி(ஸல்) அவர்கள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.
''எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்! அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
மேலும் லைலத்துல் கத்ரை கடைசி ஏழு நாட்களில் தேடுமாறும் வலியுறுத்தியுள்ளார்கள்.
(3) நபித்தோழர்களில் சிலருக்கு (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது. அப்போது நபி(ஸல) அவர்கள் ''உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாட்களில் ஒத்து இருப்பதாக காண்கிறேன். ஆகவே அதை தேடுபவர் (ரமளானின்) கடைசி ஏழு நாட்களில் அதை தேடட்டும் என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்
பெருமானார்(ஸல்) அவர்கள் கடைசி பத்து நாட்கள் அல்லது கடைசி ஏழு நாட்கள் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளதை காண்கிறோம். அதே போல் கடைசிப்பத்தின் சில நாட்களை சுட்டிக்காட்டி இந்நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
(4) ரமளானின் கடைசிப்பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள். லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி
Labels:
இஸ்லாம்
Thursday, August 18, 2011
லைலத்துல் கத்ர்
'நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியம் மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகலகாரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்), அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.' (அத்தியாயம் 97 ஸுரத்துல் கத்ரி - 1முதல் 5வரையிலான வசனங்கள்)
என லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான். இந்த லைலத்துல் கத்ர் இரவு எப்போது, அதில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை குர்ஆன் - ஹதீஸ் ஒளியில் அறிவோம்.
'தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம். நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.' (அத்தியாயம் 44 ஸுரத்துத் துகான் - 2முதல் 4வரையிலான வசனங்கள்) என அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்.
அருள்மறை குர்ஆன் யாருக்கு அருளப்பட்டதோ, அந்த அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் பற்றி என்ன விளக்கமளிக்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ரு, கடைசி ஏழு இரவுகளில் இருப்பதாக கனவு கண்டு நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'உங்கள் கனவைப்போல் நானும் கண்டேன். எவர் (லைலத்துல் கத்ர்) இரவை அடைய முயற்சிக்கின்றாரோ, அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதார நூல்: புஹாரி)
'லைலத்துல் கத்ரை அறிவிப்பதற்காக நான் வெளியில் வந்தேன் அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தார்கள். அவ்விருவருடனே ஷைத்தான் இருந்தான். எனவே நான் அதை மறந்துவிட்டேன். எனவே அதை (லைலத்துல் கத்ரை) கடைசி பத்து நாட்களில் தேடுங்கள்' (அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)
மேற்குறிப்பிட்ட ஹதீஸ்கள் யாவும் பொதுவாக லைலத்துல் கத்ர் பிந்திய பத்து இரவுகளில் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.
'லைலத்துல் கத்ரு இரவை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' - (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) ஆதார நூல்: புஹாரி)
மேற்படி ஹதீஸிலிருந்து லைலத்துல் கத்ர் இரவு பிந்திய பத்துக்களில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்கள்
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு பற்றி நபி(ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸ் ஒன்றை காண்போம்.
'யார் லைலத்துல் கத்ரு இரவில் நம்பிக்கையோடும் (அல்லாஹ்விடம் கூலியை) எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்' (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதார நூல்: புஹாரி, முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் சொன்ன வணக்கத்தை நாம் எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதற்கு அவர்கள் காட்டித் தந்த வழிமுறையிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
Labels:
இஸ்லாம்
Friday, August 5, 2011
எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்!
| எச்சரிக்கை! : பெண்கள் வெளியூர் பயணம்! | ![]() | ![]() |
| வாசகர் பகுதி - வாசகர் மடல் |
| புதன், 03 ஆகஸ்டு 2011 11:00 |
அன்புச் சகோதர சகோதரிகளே!அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர்ப் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள்அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு. சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லைஎன்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர். இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவருடைய தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்போது தஞ்சாவூர் சென்று அங்குள்ள நரம்பியல் மருத்துவ நிபுணரிடம் உடல் பரிசோதனை செய்து கொண்டு, மருந்து-மாத்திரைகள் வாங்கி வருவது வழக்கம். அதுபோலத்தான் அன்றும் நடந்தது. |
Labels:
மற்றவை
Friday, July 8, 2011
உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
வீழ்ந்த சமுதாயம் வீழ்ந்தே கிடக்குமா?. உலக முஸ்லிம்களே விழித்தெழுங்கள்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
...யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹாபீஸ். A.B முஹம்மது. (Director-General, Al Baraka Bank) அவர்கள் ஆற்றிய உரை, நம்மை இந்த கட்டுரையை எழுத உசுப்பேத்தியது!.
...யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல!. என்ற அடைமொழியுடன்.......
உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.
ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.
ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.
முஸ்லிம்களே!.. மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள், மற்றவர்களை பார்த்து பயப்படுகிறீர்கள்?. ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர்கள்!!. அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே!. என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம், இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்!.
Labels:
இஸ்லாம்
Monday, July 4, 2011
வஸீலா ஒரு விளக்கம்
மனிதன் செய்யும் நல்லமல் இம்மையில் பயன் தருமா? – வஸீலா ஒரு விளக்கம் (1)
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபிஅல்லாஹ்வை ரப்பாக ஏற்று அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை வழி காட்டியாக ஏற்று ஈமானின் அம்சங்களை நம்பி செயற்பட வேண்டிய கடமை ஒரு முஸ்லிமுக்கு உண்டு.
அல்லாஹ்வின் வேதத்தையும் நபிகளாரின் ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் கலப்படமற்ற எண்ணத்துடன் (இஹ்லாஸுடன்) செயற்படுத்தும் போதே அது இபாதத்தாகக் கணிக்கப்படும் அந்த இபாதத்களுக்கே நன்மைகளும் வழங்கப்படும் என் பதை அல்குர்ஆனும் ஹதீஸும் தெளிவு படுத்துகிறது.
இந்நிலையில் அமல்கள், இபாதத்கள் புரிபவனுக்கு மறுமையில் மகத்தான கூலி கள் வழங்கப்பட்டு சுவனமும் பரிசாக வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த உலகிலேயே அந்த இபாதத்திற்கான நற்பலன்களும் காட்டப்படுகின்றன.
அல்லாஹ் கூறுகிறான்:
“விசுவாசம் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவனிடத்திலே “வஸீலா” தேடுங்கள். அவனது பாதையிலே போர் புரியுங்கள். வெற்றியடைவீர்கள். (அல்குர் ஆன் 5:35)இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து முக்கியமான மூன்று கட்டளைகள் சொல்லப்படுகின்றன.
1. அல்லாஹ்வை அஞ்சி தக்வாவுடன் வாழ வேண்டும்.
2. அல்லாஹ்விடத்தில் வஸீலா தேட வேண்டும்.
3. அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் புரிய வேண்டும்.
தக்வா என்றால் என்ன? அதனை எப்படி செயலாற்ற வேண்டும் என்பதும் அல்லாஹ்வின் பாதையில் எப்படி ஜிஹாத் (போர்) புரிய வேண்டும் என்பதும் நன்கு தெரியும். ஆனால், அல்லாஹ்விடத்தில் எப்படி வஸீலா தேடுவது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை.
“வஸீலா” என்ற இந்த வார்த்தைக்கு இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் விளக்கம் சொல்லும்போது, “அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெறுதல்” என்பதாகக் கூறுகிறார்கள். அபூ கதாதா (ரஹ்) அவர்கள் கூறும்போது “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அவனுக்கு உவப்பான முறையில் நடந்து, அவனது நெருக்கத்தைப் பெறுதல்” என்று கூறுகிறார்கள். (நூல்: தப்ஸீர் இப்னு கஸீர்)
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையில் நெருக்கத்தைப் பெறுவதற்கு எந்த நற்காரியம் உதவி புரியுமோ அதுவே வஸீலா
எனப்படும்.
Labels:
இஸ்லாம்
Wednesday, June 29, 2011
நபிவழி நடப்போம்
எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
- எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ்ஒவ்வொரு முஸ்லிமும் தனது உயிரை விட உயர்வாக உத்தம நபி(ஸல்) அவர்களை நேசிப்பது கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது.
“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)இது குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறும் போது “உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது!” எனக் குறிப்பிட்டார்கள்.
நேசத்தின் வெளிப்பாடு:
நபி(ஸல்) அவர்கள் மீது உயர்வான நேசம் எல்லா முஸ்லிம்களிடமும் இருக்கின்றது. ஆனால் அந்த நேசம் உண்மை பெற வேண்டும் என்றால் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவதே இதற்கு இருக்கும் ஒரே வழியாகும். சிலர் தாம் அல்லாஹ்வை நேசிப்பதாகக் கூறினார்கள்.
அதற்குச் சோதனையாகப் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்;
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந் தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும், உங்கள் பாவங்களை உங் களுக்கு மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (3:31)ஒருவர் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் அவர் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும். நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றினால் அவரை அல்லாஹ்வும் நேசிப்பான்; அவரது பாவங்களை மன்னிப்பான். இந்த இரு பாக்கியங்களும் அவருக்குக் கிட்டும்.
இந்த வசனத்துக்கு அடுத்த வசனம் இப்படி அமைகின்றது;
“அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக! அவர்கள் புறக்கணித் தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்.” (3:32)இங்கே அல்லாஹ்வையும், அவரது தூதரையும் பின்பற்றுமாறு ஏவப்படும் அதே நேரம் அப்படிச் செய்யாத காஃபிர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை என்றும் கூறப்படுகின்றது. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றாவிட்டால் அல்லாஹ்வின் நேசம் கிட்டாத அதே நேரம் அவர்களை அல்லாஹ் காஃபிர்கள் எனக் குறிப்பிடுவதும் கவனிக்கத் தக்கதாகும்.
Labels:
இஸ்லாம்
Subscribe to:
Posts (Atom)






அன்புச் சகோதர சகோதரிகளே!